"ஐந்தாம் வகுப்பு வந்துட்டான் இன்னும் தாய்மொழித் தமிழைக் கூட வாசிக்கத்தெரியவில்லை. மேலும் ஆங்கில அடிப்படைச் சொற்களையும் வாசிக்கத்தெரியவில்லை."
இது போன்று, பல்வேறு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருப்போம்.
"ஏன் சில மாணவர்கள் மட்டும் வாசிக்க திணறுகிறார்கள்? வாசித்தல் திறன் ஏன் சிலரிடம் மந்தமாக உள்ளது ?", எனக் கண்டுபிடிக்கும் ஆர்வமும், பொறுமையும், அவ்வாறு பேசும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இருப்பது கொஞ்சம் அரிது தான்.
வாசிப்பு திறன் மந்தமாக இருக்கிற மாணவர்களை சற்று உற்று நோக்கினால் அவர்களின் எழுதும் திறனும் குறைவாக இருப்பதை கண்டுகொள்ளமுடியும்.
"என்ன சார் பேசுகிறீர்கள்? வாசிக்கவே முடியாதவன் எப்படி எழுதுவான்?", என்று கேட்பது புரிகிறது.
பிறந்த குழந்தையிடம் முதலில் கேட்பது தான் அதிகமாக நிகழ்கிறது. உதாரணமாக, தாய் எழுப்புகிற சத்ததை மற்ற சத்தங்களிலிருந்து வேறுபடுத்தி காண்பதையே அக்குழந்தையின் மொழிக் கட்டமைப்பிற்கான முதல்படியாக அமைகிறது. ஆக முதல் கட்டத் திறன் கேட்டல் திறன்.
இரண்டாவது கட்டமாக குழந்தையானது தான் கேட்டவற்றை திரும்ப பேச முயற்சிப்பதன் வழியாக கேட்டல் திறனிலிருந்து பேசுதல் திறனுக்கு கடந்துவருகிறது.
மூன்றாவது கட்டமாக குழந்தையானது, தன் கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் கொண்டு எழுத (கிறுக்கல்) முயற்சிக்கிறது - எழுதுதல் திறன்.
இறுதியாக குழந்தையான தான் எழுதியவற்றிகான (கிறுக்கியவற்றிற்கான) அர்த்தங்களை புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயற்சிக்கும்பொழுது வாசிப்பு நிகழ்கிறது.
ஒரு குழந்தையில் மொழியைச் சார்ந்த திறன்வளர் செயல்பாடுகள் இப்படித் தான் நிகழ்கின்றன.
எனவே, எழுதும் ஆற்றல் தான் வாசிப்புத் திறனுக்கு அடிப்படையானது. எழுதும் திறனின் தொடர் நிகழ்வாகவே 'வாசிப்பு ஆற்றல்', உருவாக்கம் பெறுகிறது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் எழுதுதல் ப்ரி-டாமினன்ட் ஸ்கில் (predominant skill) வாசித்தல் திறன் சப்-டாமினன்ட் ஸ்கில் (sub-dominant skill). எனவே, எழுதுதலில் திறன்பெற்ற மாணவரின் வாசிப்பு திறன் இயல்பாகவே வளர்ச்சியை நோக்கி கட்டமைக்கப்படுகிறது.
உதாரணமாக, கையெழுத்துப் பயிற்சியிலும், அழகாக எழுதுவதிலும் ஆர்வமுள்ள மாணவர் வாசிப்பதிலும் ஆர்வம் காட்டுவதற்கு சிறிய அளவிலான தூண்டுதலோ அல்லது சூழலோ போதுமானது.
எழுதுதல் திறனும் ட்ரேசிங், வண்ணமிடுதல், கோட்டுநிலை, கட்டற்ற அமைப்பு நிலை (கிறுக்குதல்) கட்டற்ற வரைதல், வரைதல் என்கிற நிலைகளைத் தாண்டி இறுதியாக, முறையான 'எழுதுதல்' என்கிற நிலையை கொண்டிருக்கிறது.
அனைத்து நிலைகளும் முறையாகவோ அல்லது முறைசார வகையிலோ நடக்கிறபோது தான் வாசிப்பு தன்னிச்சயாக எந்தவொரு அதீத முயற்சியின்றி ஒரு மாணவரிடம் நிகழ்கிறது..
குறிப்பு: எழுதுதல் திறன் மற்றும் அதன் அடிப்படையிலான மாணவர்களின் உளவியலை பிரிதொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.